Sunday, June 26, 2005

முதல் வணக்கம்

என்னுடைய பக்கத்தை படிக்க வந்த உங்கள் அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.

சிறுவர் பூங்கா என்ற வலைப்பூவை படியுங்க, உங்கள் குழந்தைகளுக்கும், தெரிந்த குழந்தைகளுக்கும் கதையாக சொல்லி நல்வழிப்படுத்துங்க.

என்ன, நான் வேற ஒன்றுமே சொல்லவில்லை என்று நினைக்கிறீங்களா, எங்கேங்க சொல்லுற, நான் சொல்ல நினைக்கிறதையும், சொல்ல கூடாது என்று நினைக்கிறதையும் சேர்த்து நிறைய பேர் வலைப்பூவில் சொல்லுறாங்களே!

தமிழமணம் போய் பாருங்க, நல்லாவே தெரியும்.

இதுக்கும் மேலேயும் நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிக்கனும்முன்னு முடிவு செய்தால் முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், நம்பிக்கை போய் பாருங்க, நான் அங்கே ஏதேதோ சொல்லியிருப்பேன். அதுக்கே நேரம் சரியா இருக்குதுங்க.

நன்றி.

8 Comments:

At 10:56 AM, Blogger மஞ்சூர் ராசா said...

பரஞ்சோதியாரே, உங்க பக்கத்தில் ஒன்றும் இல்லையே! ஏதாவது கடவுச்சொல் வேண்டுமா படிப்பதற்கு?

 
At 12:57 AM, Blogger பரஞ்சோதி said...

வணக்கம் அய்யா,

உங்கள் பதிலை இன்று (25-7-05) தான் பார்த்தேன், பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்.

நான் இத்தலைப்பில் ஒன்றும் இடவில்லை, அதற்கு பதிலாக சிறுவர் பூங்கா என்ற வலைப்பூவில் குழந்தைகளுக்காக கதைகள் கொடுக்கிறேன், விருப்பமிருந்தால் படித்து பதில் சொல்லுங்க. மேலும் உங்கள் மகள் குவைத்தில் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றது பற்றி எழுதியதில், அதன் சிடிகள் தேவையா என்று கேட்டிருந்தேன். பதில் கொடுங்க...

 
At 11:24 PM, Blogger கலை said...

நீங்க நிலா முற்றத்தில் வரும் பரஞ்சோதியா? உங்கள் மகள் பெயரைப் பார்த்த பின்னர்தான் இந்தக் கேள்வி என் மனதில் வந்தது. உங்கள் சிறுவர்பூங்கா பக்கத்தை எனது சினேகிதி ஒருவர் எனக்கு அனுப்பி இருந்தார். அங்கிருக்கும் சிறு கதைகளை எனது மகளுக்கும் வாசிக்கப் போகிறேன். நன்றிகள்.

 
At 4:58 PM, Blogger பிருந்தன் said...

கிறிக்கட் நல்லா இருக்கு தொடருமா?

 
At 10:59 PM, Blogger பரஞ்சோதி said...

உங்க வருகைக்கு மிக்க நன்றி பிருந்தன்.

கண்டிப்பாக கிரிக்கெட் நினைவுகள் தொடரும். அத்தோடு அனைத்து கிராமிய விளையாட்டுகளையும் சொல்ல இருக்கிறேன்.

 
At 2:24 AM, Blogger Manmadan said...

கலக்கு நண்பா கலக்கு.. பெரியவர்களுக்காகவும் நிறைய இங்கே எழுதுப்பா.

 
At 6:16 AM, Anonymous Anonymous said...

பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

 
At 9:33 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... தல பீட்டாவுக்கு மாறியாச்சா? வாழ்த்துக்கள்.
:)

 

Post a Comment

<< Home