டென்னிஸ் - பிரெஞ்ச் ஓப்பன்
இன்று பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியாச்சு.
கிராண்ட் ஸ்லாம் எனப்படும் நான்கு போட்டிகளில் ஒன்று பிரெஞ்ச் ஓப்பன் போட்டி, நான்கில் கடுமையான போட்டி பிரெஞ்ச் ஓப்பன் தான். களிமண் தரையில் ஆடப்படுவதால் ஆட்டம் மிகவும் வேகம் குறைவாக இருக்கும், மணிக்கணக்கில் ஆட்டம் நீடிக்கும். சின்ன வயசில் மாட்ஸ் விலாண்டர் ஆட்டம் ஆடத் தொடங்கினால், நாங்க ஓட்டம் எடுப்ப்போம், அப்படி பொறுமையாக ஆடுவாங்க, மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஆடுவாங்க.
விம்பிள்டன் எனப்படும் புல்தரை போட்டியில் கலக்கும் பல முன்னணி ஆட்டக்காரர்கள் களிமண் தரையில் தடுக்கி விழுவார்கள், பீட் சாம்பிராஸ் ஒரு எடுத்துக்காட்டு, அந்த வகையில் சிக்காமல் தப்பிய அதிசய ஆட்டக்காரர் ஜான் போர்க் தான். இவர் விம்பிள்டன் 5 முறையும், பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் 6 முறையும் வென்றவர்.
பிரெஞ்ச் ஓப்பன் போட்டி ஆரம்பித்தவுடன் தினம் தினம் நான் முதலில் பார்ப்பது, இன்று எந்த பெரிய தலை கவிழ்ந்தது என்று தான், ஆமாம் அது மாதிரியே நடக்கும், முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்வார்கள், அரையிறுதி ஆட்டக்காரர்கள் பெயரையும் ரேங்கையும் பார்த்தால் நாம் முன்னபின்ன கேள்விப்படாத பெயராகவே இருக்கும். அதில் கொஞ்சம் பேர் மட்டுமே புகழ்பெற்றவராக இருப்பார்கள் ஜிம் கொரியர், இவான் லெண்டில் இப்படி, ஆனால் மகளிர் போட்டியில் அப்படி இருக்காது, முன்னணி வீராங்கனைகள் தான் வெல்வார்கள்.
பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் இளம் வயதில் வென்றவர்கள் என்ற சாதனைப்பட்டியலில் ஆண்கள் பிரிவில் மைக்கேல் சாங் 17 வயதில் ஸ்டீபன் எட்பெர்க்கை வெற்றி கொண்டார். மகளிர் பிரிவில் மோனிகா செலஸ் 1990 16 வயதில் வென்றார்.
அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் கிரிஸ் எவர்ட் – 7 முறை, அழகான ஆட்டக்காரர், நான் பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலப்பாடத்திட்டத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இருந்தது. ஆடவரில் ஜான் போர்க் 6 முறை வென்றிருக்கிறார்.
இந்தியர்கள் பிரெஞ்ச் ஓப்பனில் என்று பார்த்தால் மகேஷ் பூபதி ஜப்பானை சேர்ந்த அழகான இளம் வீராங்கனையோடு ஜோடி சேர்ந்து ஆடி வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை 1997ல் வென்றார். பின்னர் லியாண்டருடன் சேர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் 1999 மற்றும் 2001ல் வென்றார்.
சென்ற ஆண்டு வென்றவர்கள் ஆடவர் பிரிவில் ரபெல் நாடல், மகளிர் பிரிவில் ஜஸ்டின் ஹெனான்.
இந்த ஆண்டு ???
வழக்கம் போல் களிமண் ராசா ரபெல் நாடல் வெல்லுவார் என்று எதிர்பார்க்கலாம்.
10 Comments:
சோதனை பின்னோட்டம்.
ஆகா ...முந்தி கொண்டீரா,
இந்த முறை பெடரர் ஜெயிக்கவேண்டும் என்பது என் ஆசை.
மீண்டும் மீண்டும் களிமண் தரையில் வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் துணிந்து விளையாடும் தீரர் ஃபெடரர்
ஆனால் முதல் ரவுண்ட் முதல் செட்டிலே திணறிவிட்டார் திணறி.பார்ப்போம்.
(அந்த விலாண்டர், லெண்டில் மேட்சையா சொன்னீங்க..மணிக்கணக்கா விளையாடுவங்கன்னு)
வாங்க தலைவரே!
தலைப்பு: முத்துவுக்காக ஒரு பதிவு
என்று வைக்க நினைத்தேன், அப்புறம் ஏதோ அரசியல் பண்ணுகிறேன் என்று மக்கள் நினைச்சிடக்கூடாதுன்னு மாத்திட்டேன் :)
ஆமாம் விலாண்டர் என்றாலே கடுப்பாகி விடும், மனுசன் முன்னேறி வந்து விளையாடவே மாட்டார், தற்காப்பு ஆட்டம் ஆடி வெறுப்பேற்றிடுவார்.
அப்புறம் பிரெஞ்ச் ஓப்பன் என்றால் எல்லோரும் கலர் கலரா உடை உடுத்தி ஆடுவதால் பார்க்க நல்லா இருக்கும்.
தலைவரே,
இன்று வரை பெரிய தலைகள் எதுவும் விழவில்லை.
(நம்ம சானியா மட்டும் அவுட்)
தலைவரே!
நாம பதிவு போட்ட நேரம் போலிருக்குது, பெரிய தலைகள் இன்னும் ஆட்டத்தில் இருக்காங்க.
மாரட் சாபினும், ஆண்டி ரோடிக் மட்டுமே வெளியேறிட்டாங்க.
இளம் தேவதை மார்டினா ஹிங்ஜஸ் கலக்குறாங்க, கலப்பு இரட்டையரில் நம்ம மகேஷ் கூட இருக்காங்க, வெல்ல வாய்ப்பும் இருக்குது.
சாபின் அந்த காயத்தில் இருந்து விடுபடவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய தங்கை கலக்குகிறாள் போல் தெரிகிறது.
ரோடிக் களிமண் தரையில் சுத்தம்.
லியாண்டர் அவுட்.
ம்..பார்ப்போம்.
ஆண்கள் ஒற்றையர் நான்காம் சுற்றில் ஸ்பெயினின் நாடல் சூப்பர் வெற்றி பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை 6-2, 5-7, 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஹிங்கிஸ், காலிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்சை சந்திக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சேவியர் மெலிசி (பெல்ஜியம்) ஆன்ட்ரே பாவல் (ரொமேனியா), அலெக்சாண்டர் வாஸ்கி (ஜெர்மனி) ஜோடியிடம் 6-2, 2-6, 1-6 என்ற செட்களில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
கடைசி செய்தி:
மார்ட்டினா ஹிங்கிஸ் அவுட்.என் உள்ளம் கவர் நாயகி கிம் கிளிஸ்டர்ஸ் வெற்றி.
சானியா இரட்டையர் ஆட்டத்திலும் தோல்வி. இந்திய சவால் முடிவடைந்ததா?
தலைவரே!
இன்னும் ஒரு வாய்ப்பு இருக்குது, ஆமாம்
நம்ம லியாண்டரும் ரஷ்யாவின் மரியா கிரிலென்கோவும் சேர்ந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டி இன்று நடக்குது, யாருக்கு எதிரா தெரியுமா?
டென்னிஸ் பாட்டி மார்ட்டினா, பாப் பிரையன் ஜோடியுடன்.
ஆமாம் கிம் உங்க உள்ளத்தையும் கவர்ந்தவரா?
டென்னிஸ் பாட்டி லியாண்டர் கூடத்தானே சோடி போட்டிருந்துச்சி.. என்ன ஆச்சு? லடாயா? லியாண்டர் குறும்பு தாங்க முடியலையப்பு...
உங்களுக்கும் கிம் பிடிக்குமா? எனக்கு அவளை ஏன் பிடிக்கும்னு தனிப்பதிவே போடலாம். கோப்பை வெல்லட்டும்
Post a Comment
<< Home