Wednesday, February 28, 2007

நம்பிக்கை போட்டி முடிவுகள்

நம்பிக்கை போட்டி முடிவுகள்

அன்பு இணைய நெஞ்சங்களே!

அனைவருக்கும் நம்பிக்கையின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்திய காதல் கவிதைகள்(ஏன் நடத்தப்பட்டது என்ற விபரத்தை அனைவரும் அறிவீர்கள்) போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டது.

ஆரம்பத்தில் சில நாட்கள் விறுவிறுப்பு குன்றிய நிலையில் இருந்த போட்டி பின் விறு விறுப்பு கூடி கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக் களத்தில் இறங்கியது.

சிலரது படைப்புகள் விதிமுறைக்கு மாறாக இருந்தமையால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதில் எங்களுக்கும் வருத்தமே! அடுத்த முறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தங்கள் படைப்பை தர வேண்டும் என்று அன்புடன் இந்நேரம் வேண்டிக் கொள்கிறோம்.

கவிதைகள் குறித்து படைப்பாளிகளும் நடுவர்களும் போட்டி முடிவு தங்கள் கணிப்பு படி சரியாக வந்திருக்கிறதா என்ற ஆர்வத்துடன் நிச்சயமாக இருப்பார்கள்!

ஒருவர் அல்லது இருவர் மதிப்பீடு செய்தால் சரியாக சில சமயம் வரும்! ஆனால் 11 பேர் ஒரே படைப்பை இவர் இன்னார் என்று அறியாமல் மதிப்பீடு செய்தால் அது சரியாகத்தான் வரும். அதுவும் ஆண்கள் எழுதிய காதல் கவிதை பெண்கள் மதிப்பீடு செய்தது பெரும் சிறப்பு.

ஆகவே அறிவிக்கப்படும் முடிவுகள் மிகச் சரியானவையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த முடிவுகளை மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்க உள்ளோம்.

மிகுந்த பணிச்சுமையில் அடியேன் இருக்கின்றேன். எனவே என்னால் ஏற்பட்ட தாமத்தை பொறுத்தருளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நம்பிக்கையின் மீது மிக்க ஆர்வம் கொண்டு பொருளுதவி செய்த அன்பர்களுக்கும் , விளம்பர உதவி செய்த அன்பர்களுக்கும், முத்தமிழ் மற்றும் இல்லம் குழும நண்பர்களுக்கும், முக்கியமாக கவிதைகளையெல்லாம் மிக்க பொறுமையுடன் மதிப்பீடு செய்த நடுவர்களுக்கும் எத்தனை நன்றிகள் நான் உரைத்தாலும் அவை கணக்கிலாகாது. ஆக அனைவரையும் அடிபணிந்து வணங்கி போட்டி முடிவுகளை அறிவிக்கும் வரை பொறுத்தருள வேண்டுகிறேன்.

நன்றி!

நன்றி!

நம்பிக்கை குழுமம் சார்பாக

பாஸிட்டிவ் ராமா

Labels:

0 Comments:

Post a Comment

<< Home